Thursday, November 22, 2007

பேரணிக்கு , போலீஸ் அனுமதி............................ மறுப்பு...?


பிரிட்டிஷ் தூதரகத்தில் , 100000 பேர் கையோப்பம் இட்ட கோரிக்கைகளை அளிக்க இந்து உரிமை செயல்பாட்டு இயக்கம் HINDRAF , நடத்த இருந்த பேரணிக்கு மலேசிய போலீஸ் அனுமதி அளிக்க மறுத்தது , இதனை தொடர்ந்து , பிரதம அமைச்சருக்கு , மறு விண்ணப்பம் அனுப்பபபட்டு உள்ளது, இன் நிலையில் நேற்று , திரு .வைத்திய மூர்த்தி , அதி காலை , கைது செய்யப்பட்டார்.. பின்னர் 800.00 வெள்ளி ஜாமினில் , வெளிவிடபட்டார்.....






அதிக தகவல்களுக்கு இங்க பார்க்க

Saturday, November 10, 2007

மலேசிய இந்தியர்களும் , உரிமைகளும் ,

உலகில் இந்திய வம்சாவழி , மக்கள் பெரும்பான்மையான நாடுகளில் சிறப்பாக வசிக்கின்றனர் , அங்கு அவர்கள் வசிக்கும் நாட்டை முன்னேற்ற ,தம் பங்கினை உற்பத்தி , கலை , கலாசாரம் , மற்றும் நிர்வாக முறைகளிலும் கூட பங்கு கொள்கின்றனர்.... உதாரணமாக வல்லரசான அமெரிக்காவில் ஒரு பாபீ ஜிந்தல் , ஃபீஜி இல் மஹெந்திர சவுதிரி , என்று கூறலாம் , அங்கு கூட இந்து , முஸ்லிம் மற்றும் கிருதுவ மக்கள் தம் தம் சமய முறையில் வழுவாமல், பின்பற்றி வாழ்கின்றனர்... ஆனால் ஒரு சில நாடுகளில் இந்தியர்களின் நிலமைசிறிது கவலை அளிக்க கூடியதாக உள்ளது.. அவ்வகையில் இப்பொழுது மலேசியாவில்

சுமார் 27,389,000, மக்கள் வசிக்கும் மலேசியாவில் , 68.4 விழுக்காடு , முஸ்லிம்களும் , 19.2 விழுக்காடு புத்த சமயமும் ,9.1 விழுக்காடு கிருதுவ சமயமும் , 6.3 விழுக்காடு ஹிந்து சமயத்தையும், மற்ற சமய நம்பிக்கை உடையவர்கள் 5 விழுக்கடும் உள்ளனர், மலேசியா வளர்ந்த நாடு , அதன் முன்னேற்றதில் கட்டாயமாக இந்தியர்களுக்கு மிக பெரும்பான்மையான பங்கு உண்டு , ராஜேந்திர சோழன் படை எடுப்பில் இருந்து , இன்று வரை , இங்கு அக்காலத்தில் வெள்ளையர்களால் ,இரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதட்காக அழைத்து வரப்பட்டு , குடியமர்த்தப்பட்டார்கள்.

இந்தியர்களின் உழைப்பு, வியர்வை , இரத்தம் , ஆகியவையால் மலேசியா , வளர்ந்தது , இன்று மலேசிய இந்தியர்களின் சமய உரிமையும் , சம உரிமையும் மறுக்கப்படுகின்றது... இதனை தடுக்கவும் , பாதுக்காகவும் , திரு . வைத்திய மூர்த்தி , உதயகுமார் , கணபதி ராவ் மற்றும் சிலரால்( ஹின்றப் HINDRAF ) இந்து சமய உரிமைகள் செயல்பாடு இயக்கம் , பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , பேரணிகளையும் , போராட்டங்களையும் நடத்திவருகின்றனர் , இதன் தொடர்ச்சியாக வருகின்ற 25-11-07 அன்று , பிரிட்டிஷ் தூதரகத்தில் , சுமார் 100000 நபர்கள் , கையோப்பம் இட்ட , கோரிக்கை நகலை , வழங்க உள்ளனர்....

அதன் விபரம்...